அவசரத்தில் வாங்கிய செகண்ட் ஹேண்ட் வாகனத்தால் கஷ்டப்படும் எத்தனை பேரை நாம் கண்டிருப்போம்? எமது சமூகத்தில் சகோதர மொழியில் ஒரு பழமொழி உண்டு மணமகள் மற்றும் காரைப் பார்க்க இருள் சூழ்ந்த நேரத்தில் செல்ல வேண்டாம் என்று ஏனெனில் ஒரு வாகனம் ஒரு திருமணம் போன்ற வாழ்க்கையில் மிகவும் கவனமாக எடுக்க வேண்டிய முக்கியமான முடிவு ஆகும். எனவே இந்த கட்டுரையில் நாம் பயன்படுத்திய வாகனம் ஒன்றை வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டிய விஷயங்களை பற்றி பேச இருக்கிறோம்.
1.பட்ஜெட்
- நீங்கள் முதல் முறையாக ஒரு காரை வாங்கினாலோஅல்லது அப்கிரேட்காகவோ அவ்வாறில்லாது ஏற்கனவே உள்ள வாகனத்தை விற்று புதிய வாகனத்தை கொள்வனவு செய்யும்போது , உங்களது பட்ஜெட்டை கவனமாகத் திட்டமிடுவது அவசியமாகும். இதற்காக பின்வரும் விடயங்களை கவனியுங்கள்.
- முதலில் நீங்கள் வாங்க விரும்பும் வாகனத்தின் விற்பனை விலை பற்றிய தோராயமான அறிவை பெற்றுக்கொள்ள வேண்டும், இதற்காக 15,000 திற்கும் மேலான வாகன விற்பனை விளம்பரங்களைக் கொண்ட careka.lk என்ற இணையதளத்திலிருந்து நீங்கள் உதவியைப் பெறலாம் – இங்கே கிளிக் செய்யவும்
- அதன் பிறகு வாகனம் வாங்குவதற்கு கையில் இருக்கும் பணத்துடன் கூடுதலாக ஒரு லீசிங் வசதி தேவைப்பட்டால், நீங்கள் இலங்கை மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்ட ஒரு நிதி நிறுவனத்தின் உதவியைப் பெறலாம் – மேலதிக விபரங்களுக்கு – Contact US லிங்க்
- இலங்கை மத்திய வங்கியால் வழங்கப்பட்ட விதிமுறைகளின்படி, நீங்கள் பெறும் வாகனத்தின் மதிப்பீட்டில் (Valuation) 70% ஐ தாண்டாத தொகைக்கு குத்தகை வசதியை நீங்கள் பெறலாம். இது பற்றிய மேலதிக தகவல்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் இணையத்தளத்தை நாடவும்.
- அடுத்தது லீசிங் வசதிக்கு நீங்கள் செலுத்த வேண்டிய மாதாந்திர தவணையை நீங்கள் முடிவு செய்ய வேண்டும். நீங்கள் அவ்வாறு செய்ய முடிவு செய்யும் போது உங்கள் தினசரி செலவுகள் சுமையாக இருக்காதவாறு உறுதி செய்து கொள்ளுங்கள், மேலும் நீங்கள் வாங்கும் வாகனம் உங்களுக்கு ஒரு புதிய வருமானத்தைக் கொண்டு வராவிட்டால் , நீங்கள் அந்த வாகனத்திற்கு மாதந்தோறும் செலவிட வேண்டிய எரிபொருள், பராமரிப்பு, சேவை, காப்பீடு ஆகிய செலவுகளை மாதாந்திர தவணைக்கு மேலதிகமாக நீங்கள் செலுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களுக்கு மாதாந்த தவணையை கணக்கிடுவதற்கு கடினமாக இருப்பின் எங்களுக்கு இங்கே ஒரு செய்தியை அனுப்பவும் நாங்கள் உங்களுக்கு உதவி செய்வோம் – – Contact US லிங்க்
போனஸ் உதவிக்குறிப்பு – பட்ஜெட் என வரும்போது மிக முக்கியமான ஒன்று சொல்ல வேண்டும், வாகனம் ஒன்று வாங்குவது
என்பது பலரின் கனவாகும், ஆனால் தன்னுடைய வருமானத்தை விட பராமரிப்புக்காக அதிக செலவு
செய்யாமல், நன்றாக தேடி பார்க்காமல் அல்லது அவசரத்தில் வாகனம் வாங்குவது மிகப்பெரிய ஒரு பிரச்சினைக்கு கொண்டு செல்ல கடியதாகும்.
உதா. உதிரி பாகங்கள் மிகவும் விலை உயர்ந்தவையாகவும் எரிபொருள் பாவனைக்கான செலவு
அதிகமானதான ஆனால் தோற்றத்திலும் வசதியிலும் அதிக விலை கொண்ட ஒரு வாகனத்தை வாங்கி
பராமரிப்பதில் சிரமம் உள்ளவர்களை நாங்கள் பார்த்திருக்கிறோம், மேலும் வாகனமொன்று கட்டாயம்
வாங்க வேண்டும் என விலைக்குறைந்த தரம் குறைந்த வாகனத்தை வாங்கி அதை பழுதுபார்க்க
பல வருடங்களாக பணம் இல்லாமல் கேரேஜில் தங்கள் வாகனங்களை விட்டுச்செல்பவர்களும்
இருக்கிறார்கள். எனவே நன்கு திட்டமிட்டு தெரிந்தவர்களிடம் ஆலோசனைகளை பெற்று
வாகன கொள்வனவில் ஈடுபடவும் என்பதே எமது ஆலோசனையாகும்.
2. உங்கள் தேவைகளுக்கு வாகனம் எவ்வாறு பொருந்துகிறது?
- நீங்கள் எந்த நோக்கத்திற்காக வாகனத்தைப் பயன்படுத்த விரும்புகிறீர்கள்? உங்கள் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான வாகனத்தை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.
- உங்களுக்கான அத்தியாவசியங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள் – குடும்பத்தில் அனைவரும் பயணம் செய்ய முடியுமா / எரிபொருள் திறன் / வாகனத்தின் விசேட அம்சங்கள். உதா. பவர் ஸ்டியரிங்.
- வாகனப் பயன்பாட்டு விடயங்கள்- உதா. நீங்கள் ஒரு நாளைக்கு அதிக மைல்கள் பயணம் செய்ய வாகனத்தைப் பயன்படுத்துபவராயின் உங்களுக்கு ஹைப்ரிட் வாகனமொன்றே பொருந்தும்/ நீங்கள் அடிக்கடி பயன்படுத்தாவிட்டால் ஹைப்ரிட் பராமரிப்பு செலவுடன் ஒப்பிடும்போது அது ஒரு நல்ல தேர்வாக இருக்காது.
- நீங்கள் நகர்ப்புறங்களில் மட்டுமே ஓட்டுகிறீர்களா அல்லது நீண்ட தூர வீதிகளில் / நெடுஞ்சாலைகளில் ஓட்ட விரும்புகிறீர்களா?
- வியாபாரத்துக்காக வாகனத்தைப் பயன்படுத்துபவர்களாயின் வாகனத்தின் அளவு (டிக்கி)
- பெட்ரோல் / டீசல் வாகனமா? இது பற்றிய விரிவான கட்டுரைக்காக காத்திருங்கள் – careka.lk FB பக்கம்
- சுற்றுச்சூழல் நட்புடனான வாகனங்களை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
3. ஒரு வாகனத்தைக் கண்டுபிடிப்பதற்கான வழிகள்
உங்கள் தேவைகளுக்கு ஏற்ப மாறுபடும் என்பதால், வாகனத்தின் வகை மற்றும் மாதிரியை நீங்கள்
தான் முடிவு செய்ய வேண்டும், இங்கு உங்களது உணர்வுகள் ஆசைகளை விட தேவைக்கு முன்னுரிமை
கொடுப்பது மிகவும் முக்கியம், ஏனென்றால் எங்களிடம் நிறைய பிடித்த கார் மாடல்கள்
இருந்தாலும் , வாகனம் உங்கள் அன்றாட வாழ்க்கைக்கு பொருந்தாது, ஏனென்றால் உணர்ச்சிகள்
ஆசைகள் என்பன மிக விரைவாக மாறிவிடும் ஆனால் தேவைகள் அவற்றை போல் விரைவாக மாறாது.
எனவே இது பற்றியும் கவனமாக இருங்கள்.
ஆனால் இன்னும் ஒரு விஷயம் கூறவேண்டும் என்னவென்றால், நீங்கள் ஆசைப்படும் வாகனத்தை நீங்கள்
எப்போதும் விரும்புவீர்கள் மற்றும் நன்றாக கவனித்துக்கொள்வீர்கள், எனவே நீங்கள் விரும்பும் வாகனம்
மற்றும் உங்கள் தேவைகளுக்கு ஏற்ற வாகனத்தை தெரிவு செய்ய வேண்டும்.
முன்னாளில் நாங்கள் ஒரு காரைக் கண்டுபிடிக்க எல்லா இடங்களிலும் அலைந்தோம், ஆனால் இப்போது
தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்துடன் எங்களுக்கு நிறைய வழிகள் உள்ளன அவையாவன;
- மிகவும் பிரபலமான ஆன்லைன் வலைத்தளங்கள் மூலம் தேடுவது (உதா: careka.lk Search)
- சமூக ஊடகங்களில் இருந்து – பேஸ்புக் குழு இந்த வேலைக்கு மிகவும் பிரபலமானது (உதா: careka Buy & Sell For Free Group)
- Online forum மற்றும் சமூக ஊடகங்களில் உங்கள் தேவையை இடுகையிடுவதன் மூலம்
போனஸ் உதவிக்குறிப்பு – ஆன்லைனில் ஒரு வாகனத்தைத் தேடும் போது பாதுகாப்பாக இருக்க வேண்டிய காரணியானது, வாகனம்
எவ்வளவு மலிவானதாக இருந்தாலும், வாகனதின் மதிப்பு உயர்ந்ததாக இருந்தாலும் சரி விற்பனையாளரை
சந்தித்து பரிவர்த்தனை உறுதி செய்யப்படும் வரை நீங்கள் எவ்வளவு கட்டாயப்படுத்தபட்டாலும் முன்பணம்
செலுத்தாமல் இருக்க வேண்டும். ஏனெனில் குறைந்த விலையில் வாகனத்தை விளம்பரம் செய்து முன்பணத்தை
வாங்கிய பின் தலைமறைவாகும் குற்ற செயல்கள் இலங்கையில் பல்வேறு இடங்களில் நடக்கின்றன. எனவே
வாகனத்தை பார்க்க செல்லும்போதோ அல்லது முன்பணம் செலுத்தும் பொது இவற்றை கருத்திற்கொள்ளுதல்
அவசியமாகும்.
ஆன்லைன் வலைத்தளங்களின் முக்கியத்துவம் என்னவென்றால், ஒரு வாகனத்தைத் தேர்ந்தெடுக்கும்போது அவை
நமக்கு நிறைய புதிய வழிமுறைகளை தருகின்றன – உங்களுக்கு careka.lk இணையத்தளத்தினூடாக வாகனமொன்றை சேர்ச் செய்வதன் மூலம் ஒரே நேரத்தில்
பல்வேறு வாகனங்களை ஒப்பிடம் வசதியை பெற்றுக்கொள்ளமுடியும். வாகனங்களை ஒப்பிடுவதன் மூலம்
உங்களுக்கு சரியான மற்றும் தரமான வாகனத்தை தெரிவுசெய்து கொள்ளலாம்.
04. செலவில் அக்கறை இருந்தால்…
வாகனம் வாங்கும் போது நம்மில் பெரும்பாலோர் சிந்திக்கும் ஒரு விஷயம், குறைந்த செலவில்
சிறந்த வாகனமொன்றை கண்டுபிடிப்பது, மற்றும் அதேபோல் கராஜ்களுக்கு அலையாமல் பராமரிப்பு
செலவுகளை முடிந்தவரை குறைவாக வைத்திருப்பது, எனவே பின்வரும் காரணிகளை கவனத்தில் கொள்ளவும்.
- பலர் brand new வாகனத்தை வாங்க விரும்புகிறார்கள், ஆனால் அது brand new அல்லது recondition னாக இருந்தாலும், வாகனத்தின் சந்தை மதிப்பு இலங்கையில் பதிவு செய்யப்பட்டவுடன் கண்டிப்பாக சுமார் 10% குறையும். ஆனால் வாகன விற்பனையாளர் ஏன் விற்கிறார் என்பது பற்றி இங்கே கொஞ்சம் சிந்திக்க வேண்டும், நியாயமான காரணமாக இருந்தால் பயப்பட தேவையில்லை.
- ஒரு வாகனத்தை வாங்கும் போது எஞ்சின் திறன் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும், ஏனென்றால் நீங்கள் அடிக்கடி வாகனத்தை பயன்படுத்துபவராயின் அதிக திறன் கொண்ட எஞ்சின் உங்களுக்கு அதிக செலவை தரும் மற்றும் பொதுவாக 1500 cc க்கு மேல் உள்ள வாகனங்கள் அதிக திறன் கொண்ட எஞ்சின் வாகனங்களாக கருதப்படும். இவை லீட்டருக்கு 10 கிமீக்கு குறைவான திறனையே கொண்டதாக காணப்படும். ஆனால் ஹைபிரிட் வாகனங்கள் அதிக எஞ்சின் திறன் கொண்டவை ஆனால் அவை அதிக எரிபொருள் திறனையும் கொண்டவை என்பதை நினைவில் கொள்ளுங்கள், ஆனால் ஹைபிரிட் வாகனங்கள் அதிக விலை கொண்டவை. நீங்கள் எந்த வகையான வாகனம் வாங்கினாலும், இந்த கட்டுரையிலிருந்து மைலேஜ் அதிகரிக்க நாங்கள் உங்களுக்கு உதவிக்குறிப்புகளைக் கொண்டு வந்துள்ளோம், இந்த கட்டுரைக்கு நல்லவிதமான பல பதில்கள் கிடைத்துள்ளன – இங்கே கிளிக் செய்யவும்
- மெனுவல் / ஒட்டோ என்பது பலர் விவாதிக்கும் ஒன்றாகும் – ஆனால் வெளிப்படையாக ஒரு ஒட்டோ வாகனத்தை விட மெனுவல் வாகனம் விலை குறைவாக இருக்கும், நீங்கள் நெரிசலில் மெனுவல் வாகனத்தில் சவாரி செய்யும்போது கஷ்டப்பட வேண்டி இருக்கும், ஆனால் இந்த குறைபாட்டிற்கு பதிலாக நீங்கள் கியரை சரியாக மாற்றி வாகனத்தை ஓட்டும்போது ஒட்டோ வாகனத்தை விட மெனுவல் வாகனத்தில் எரிபொருள் சிக்கனத்தை பேணலாம்
- பொதுவாக, ஆல்டோ மாருதி 800 போன்ற வாகனங்கள் இலங்கையில் பிரபலமாக இருப்பதற்கு முக்கிய காரணம் மிக குறைந்த பராமரிப்பு செலவு மற்றும் ஒரு நல்ல செகண்ட் ஹேண்ட் சந்தை ஆகும். நீங்களும் பல வருடங்களுக்கு வாகனத்தை உபயோகித்து நீங்கள் வாங்கியதை விட அதிகமாக விலைக்கு விற்கலாம்.
- பொதுவாக, ஆல்டோ மாருதி 800 போன்ற வாகனங்கள் இலங்கையில் பிரபலமாக இருப்பதற்கு முக்கிய காரணம் மிக குறைந்த பராமரிப்பு செலவு மற்றும் ஒரு நல்ல செகண்ட் ஹேண்ட் சந்தை ஆகும். நீங்களும் பல வருடங்களுக்கு வாகனத்தை உபயோகித்து நீங்கள் வாங்கியதை விட அதிகமான விலைக்கு விற்கலாம்.
- வாகனங்களுக்கும் அவ்வப்போது தள்ளுபடியுடனான விற்பனைகள்
நடைபெறுகின்றன, எனவே இதைப் பற்றி அவதானிப்புடன் இருங்கள், குறிப்பாக வாகன டீலர்களிடமிருந்து இதுபோன்ற தள்ளுபடியை நீங்கள் எதிர்பார்க்கலாம்.
5. ஏற்கனவே உள்ள வாகனத்தை விற்க விரும்புகிறீர்களா?
ஏற்கனவே உள்ள வாகனத்தை விற்று ஒரு அப்கிரேட்டான ஒன்றுக்கு செல்வது பலர் செய்யும் நடவடிக்கையாகும்
– இது பற்றிய அனைத்து விடயங்களையும் கொண்ட ஒரு விரிவான கட்டுரை எங்களிடம் உள்ளது –